பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் நிலையை மாற்ற விரும்பினால், அவன் என்ன செய்யகிறான் ?
• புதிய இலக்குகள் நிர்ணயிக்கிறான்
• பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை தேடுகிறான்
• புதிய புத்தகங்கள் படிக்கிறான்
ஆனால் நம்மில் எழ வேண்டிய ஆழமான கேள்வி: நாம் நமது படைப்பாளனை உண்மையாக அறிந்திருக்கிறோமா? இந்தக் கேள்வியின் பதில் தான் உண்மையான மாற்றத்தின் விதையாக இருக்கிறது.
அல்லாஹ் மனித படைப்பின் நோக்கத்தை இவ்வாறு விளக்குகிறான்
“ஜின்னுகளையும் மனிதர்களையும் நான் என்னை வணங்குவதற்காகத்தான் படைத்தேன்” (51:56)
• அவனை வணங்குவதற்க்காக மட்டுமே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றால் …
• அல்லாஹ் அவன் யார்?
• அவனுடைய பண்புகள் என்ன?
• அவன் எவ்வாறு இவ்வுலகை நடத்துகிறான்?
என்பதனை பற்றி அறியாமல் சிந்தித்து உணராமல் அவனை முழுமையாக எப்படி வணங்க முடியும்?
மனிதர்களாகிய நாம் அவனிடம் தேவையுள்ளாவர்களாக இருக்கிறோம். நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கிறோம்.
அல்லாஹ் திருமறையின் முதல் அத்தியாயம் சூரா அல் ஃபாத்திஹாவில் கூறுகிறான்
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். குர் ஆன் 1:4
ஆனால் அல்லாஹ் அவனிடம் உதவி தேடும் வழிமுறையை கீழ்கண்ட வசனத்தில் தெளிவாக்குகிறான்
“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன; அவற்றின் மூலமே அவனை அழையுங்கள்(பிரார்த்தியுங்கள்).” (அல்குர்ஆன் 7:180)
அல்லாஹ்வின் பெயர்களை வெறுமனே மனப்பாடம் செய்யாமல் அதனை
• அறிதல்: அவனை அவன் சொன்ன பெயர்களால் அறிந்து கொள்ள வேண்டும்
• உணர்தல்: அந்த பெயர்களின் அர்த்தத்தை உள்ளத்தில் பதிய வேண்டும்
• வாழ்தல்: அந்த பெயர்களின் தாக்கம் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும்
• மாற்றம்: அது நமது குணத்தையும் செயல்களையும் மாற்ற வேண்டும்
“அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன; அவற்றை ‘அஹ்ஸாஹா’ செய்தவர் சொர்க்கத்தில் நுழைவார்” (புகாரி 2736)
அஹ்ஸாஹா” என்றால் என்ன?
• வெறும் மனப்பாடம் அல்ல
• எண்ணிக்கை தெரிந்தல் அல்ல
• ராகத்துடன் பாடுவது அல்ல
மாறாக அர்த்தம் புரிதல் (Understanding) , அல்லாஹ்வின் பண்புகள் மீது நம்பிக்கை வைத்தல் (Believing), அதன் அடிப்படையில் வாழ்தல் (Living), நாம் நமது குணமாக மாற்றுதல் (Embodying)
உதாரணமாக அல்லாஹ்வின் ஒரு பெயர் அர்-ரஸ்ஸாக் என்றால் உணவளிப்பவன் என்று உண்மையாக நம்புபவர் ஊழல் செய்வாரா? பிறரை ஏமாற்றுவாரா? தவறான அநீதி வழியில் சம்பாதிப்பாரா?
கண்டிப்பாக செய்யமாட்டார் …ஏனெனில் “என்னுடைய ரிஸ்க் அல்லாஹ்விடமிருந்து வருகிறது என்பதனை புரிந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவார்.. பிறரின் உரிமையை அபகரிக்க மாட்டார்.
அல்லாஹ்வின் பெயர்களை உண்மையாக புரிந்துகொண்டால் நடக்கும் மாற்றங்கள்: வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பயம் குறையும் , கவலை குறையும், மனச்சோர்வு நீங்கும் நமது அகங்காரம் உடையும் …
அல்லாஹ்வை அறிவதல் நம் வாழ்வியல் ஒரு உளவியல் மாற்றம் ஏற்படும். இதனையும் தாண்டி அல்லாஹ்வின் பெயர்கள் இவ்வுலகில் அமைதி நிலவு நீதி மேலோங்க செய்யும்..
அல்லாஹ்வின் பெயர்களை நாம் அறியும் போது தவிர்க்க வேண்டிய தவறான அணுகுமுறைகள்
செய்யக்கூடாதவை:
• மூடநம்பிக்கை: பெயர்களை சுவரில் தொங்கவிட்டு “பரக்கத் வரும்” என நம்புதல்
• அறிவியல்-பூர்வமற்ற கூற்றுகள்: குறிப்பிட்ட பெயரை சொன்னால் குறிப்பிட்ட நோய் குணமாகும் என ஆதாரமின்றி கூறுதல்
• மந்திர அணுகுமுறை: பெயர்களை மாயாஜால வார்த்தைகளாக பயன்படுத்துதல்
சரியான அணுகுமுறை:
அல்லாஹ்வின் திருநாமங்கள் → வாழ்வதற்கான வழிகாட்டி அவை மந்திர வார்த்தைகள் அல்ல — மாற்றும் சக்திகள்.
அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவதால் நமக்கு
அறிவு (Knowledge) – அவனைப் பற்றிய தெளிவு பிறக்கும்
அன்பு (Love) – அவன்மீதான ஈர்ப்பு அதிகமாகும்
நம்பிக்கை (Hope) – நம்பிக்கையில் உறுதி அதிகரிக்கும்
சமநிலை (Balance) – வாழ்க்கையில் நிதானம் பேனுவோம்
பொறுப்பு (Responsibility) – செயல்களில் கவனம் செலுத்துவோம்
கருணை (Compassion) – பிறர்மீது அன்பை வெளிபடுத்துவோம்
தாழ்மை (Humility) – அகங்காரமின்மையுடன் வாழ்வோம்.
தினசரி கூறும் வார்த்தைகள்:
நாம் ஒவ்வொரு நாளும்:
• அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ்)
• சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மகத்தானவன்)
• அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
என ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் கூறுகிறோம்
ஆனால் அடிப்படைக் கேள்வி:
அந்த “அல்லாஹ்” யார் என்பதை ஆழமாக சிந்தித்திருக்கிறீர்களா?
இதுவே மாற்றத்தின் முதல்படி:
அந்த சிந்தனை தான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தைத் தொடங்கும் இடம்.
நமது கடமை:
1 அறிதல் → அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அறிந்து
2 உள்வாங்குதல் → அதை உள்ளத்தில் பதித்து
3 மாற்றுதல் → அதை குணமாக மாற்றி
4 வாழ்தல் → அதை செயலாக வெளிப்படுத்துவோம்
வாழ்க்கை மாற்றத்தின் ஐந்து-நிலை சூத்திரம்:
அறிதல் → சிந்தித்தல் → வாழ்தல் → மாற்றம் → ஈருலகவெற்றி (துனியா & ஆகிரத்) 
அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது அழகிய திருநாமங்களை உண்மையாக அறிந்து அதன் மூலம் வாழும் அருள்புரிவானாக.
“அல்லாஹ்வுக்கே அழகிய திருநாமங்கள் உண்டு; அவற்றின் மூலம் அவனை அழையுங்கள்” – (7:180)
இந்த ரமலானில் அல்லாஹ்வின் முப்பது திருநாமங்களை அறிந்து அதனை நாம் வாழ்வில் செயல்படுத்து என்னுடன் இணையுங்கள்